புதுப்பேட்டை 2: உறுதி செய்த செல்வராகவன்!

dhanush biography
dhanush biography

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ்.

இவர் தனது தந்தை இயக்கிய படத்தில் அறிமுகமாகி, தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் சில படங்களில் நடித்தார், அதில் புதுப்பேட்டை படம் முக்கியமானது.

இந்நிலையில் புதுப்பேட்டை இக்காலக்கட்டத்திற்கு ஏற்றது எனவும் அதன் இரண்டாம் பாகம் வெளியாக வேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், இத்திரைப்படத்திற்காக முன் தயாரிப்பு வேலைகள் நடந்து வருவதாகாவும் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்தைத் தயாரித்த கலைப்புலி எஸ். தாணு இப்படத்தை தயாரிக்க செல்வராகவன் இப்படத்தை இயக்குவார் என்றும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என செய்திகள் வெளியாகியுள்ளது.