கரீபியன் பிரிமியர் லீக்கின் முதல் அரையிறுதி இன்று

i
i

இருபதுக்கு – 20 கிரிக்கெட்டின் புகழ் பெற்ற மேற்கிந்திய கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.

மேற்கிந்தியதீவுகளின் சகலதுறை அதிரடி ஆட்டக்காரர் கிரேன் பொல்லார்ட் தலைமையிலான ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியும் றோமன் பவல் தலைமையிலான ஜமைக்கா தலவாஸ் அணி மோதவுள்ளது.

இந்த தொடரில் இன்னமும் வீழ்த்தப்படாத அணியாக உள்ள பொல்லார்ட்டின் அணி உள்ள நிலையில் அந்த அணி மீதான எதிர் பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இந்த நிலையில் எதிர்வரும் ஐ பி எல் போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பொல்லார்ட் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.