கொரோனாவால் தமிழ் நடிகர் பலி!

447
447

கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மூத்த ஊடகவியலாளரும், திரைப்பட நடிகருமான ப்ளோரன்ட் சி. பெரேரா இன்று(15) காலமானார்.

கொரோனா காரணமாக பல சினிமா நட்சத்திரங்கள் பாதிக்கப்பட்டு குணமாகியுள்ளனர். ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக சில நடிகர்கள் உயிர் இழந்தும் உள்ளனர். அந்த வகையில் தமிழ் நடிகரான ப்ளோரன்ட் சி. பெரேரா கொரோனாவால் பலியாகியுள்ளார்.

கயல் படத்தின் ஜமீந்தாராக நடித்து கவனத்தை ஈர்த்த அவர் அதன் பின் பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்து வந்தார்.

அவரது மறைவு திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.