சர்வதேச போட்டிகளை இலங்கையில் நடத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் -நாமல்

ராஜபக் ஷ
ராஜபக் ஷ

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை இலங்கையில் நடத்த முடியுமா என்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை மன்றகல்லூரியில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை இலங்கையில் நடத்த முடியுமா என்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படுகிறது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் எமது நாட்டு விளையாட்டுத் துறை வீரர்கள் விளையாட்டு பயிற்சிகளில் ஈடுப்படுவதை தவிர்த்துள்ளார்கள்.

நவீன தொழினுட்ப வசதிகளை உள்ளடக்கிய உடற்பயிற்சிகளை விளையாட்டு வீரர்கள் இலங்கை மன்றக் கல்லூரியில் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு தற்போது ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.