மாநாடு’ திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் ……..

simbu031020 3
simbu031020 3

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் ’மாநாடு’ திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு இறுதியில் தான் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

simbu031020 2
simbu031020 2

இந்த நிலையில் சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு திரைப்படம் முப்பதே நாட்களில் உருவாக உள்ளது என்பதும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க உள்ளது என்றும் வெளிவந்துள்ளது.

simbu031020 1
simbu031020 1

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்க உள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் திண்டுக்கல்லில் தொடங்க இருப்பதாகவும் தற்போது கேரளாவில் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்துள்ள சிம்பு இவ்வார இறுதியில் சென்னை திரும்ப உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு 30 நாட்களிலும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் இரண்டு மாதங்களிலும் முடித்துவிட்டு மூன்றே மாதங்களில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதால் சிம்புவின் அடுத்த படம் இன்னும் 3 மாதங்களில் வெளிவரும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இதனால் சிம்புவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.