தவறை தவிர்த்திருக்கலாம் : ரஜினிகாந்த்

rajinikanth1
rajinikanth1

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் நடிகர் ரஜினி. இவர் அண்மையில் தான் செய்த ஒரு விஷயத்திற்காக வருந்தி டுவிட் செய்துள்ளார்.

இவருக்கு சொந்தமாக கோடம்பாக்கத்தில் ராகவேந்திரா மண்டபம் இருப்பது அனைவரும் அறிந்தது தான்.

அந்த மண்டபத்திற்கான சொத்து வரி ரூ. 6 லட்சத்து 50 ஆயிரம் வரும் ஒக்டோபர் 15ம் திகதிக்குள் கட்ட வேண்டும் என்று மாநகராட்சி துண்டுப்பிரசுரம் அனுப்பியுள்ளனர்.

ஆனால் மாநகராட்சி அளித்த இந்த துண்டுப்பிரசுரத்தை எதிர்த்து ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி, மாநகராட்சியின் துண்டுப்பிரசுரத்துக்கு செப்டம்பர் 23-ஆம் திகதி பதிலளித்துவிட்டு உடனடியாக நீதிமன்றத்திற்கு வந்தது ஏன்? என்றும் இது போன்று மனுவை தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததால் அபராதம் விதிக்கப்போவதாக நீதிபதி எச்சரித்ததைத் தொடர்ந்து தனது மனுவை வாபஸ் பெற்று கொள்வதாக ரஜினிகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ரஜினிகாந்த் தற்போது வருந்தி டுவிட் செய்துள்ளார். அதில்,

ராகவேந்திரா மண்டப சொத்து வரி…நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவறைத் தவிர்த்திருக்கலாம். அனுபவமே பாடம் என்று பதிவு செய்துள்ளார்.