சூர்யாவின் ‘சூரரைப் போற்று‘ திரைப்படம் குறித்த புதிய தகவல்!

சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள ’சூரரைப் போற்று’ திரைப்படம் எதிர்வரும் 30ஆம் ஆம் திகதி ஓடிடியில் வெளியாகவுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

இந் நிலையில் தற்போது இத் திரைப்படத்தின் ட்ரெய்லர் மிக விரைவில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ட்ரெய்லரானது ஒரு நிமிடம் 52 செக்கன்களைக் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இத் தகவலானது சூர்யாவின் ரசிகர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதோடு ட்ரெய்லர் இணையதளங்களை ஸ்தம்பிக்க வைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ள இந்த படத்தில் கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் நடித்துள்ளனர். நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.