தனுஷ் பட நடிகையிடம் பரதநாட்டியம் கற்றுக்கொண்ட சிம்பு!

625.0.560.320.100.600.053.800.720.160.90
625.0.560.320.100.600.053.800.720.160.90

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் மிக பெரிய நட்சத்திரங்களில் ஒருவர், இவர் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்துவருகிறார். இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீண்ட நாட்களாக நடிகர் சிம்புவை பழைய தோற்றத்தில் பார்க்க ஆசைப்பட்டு கொண்டிருந்த அவரின் ரசிகர்கள் ஆச்சரியப்படும் வகையில், தனது உடலில் உள்ள 30 கிலோ வரையிலான எடையை குறைத்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் சிம்பு ஈஸ்வரன் படத்திற்காக பல கலைகளை கற்று வருகிறார், அந்த வகையில் பரதநாட்டியத்தையும் கற்றுக்கொண்டுள்ளார் சிம்பு.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் சிம்புவிற்கு பரதநாட்டியத்தை சொல்லிக் கொடுத்தாதே, தனுஷுடன் யாரடி நீ மோகினி படத்தில் நடித்த சரண்யா மோகன் தான்.