’19 (1)(a)’ திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணையும் பிரபல நடிகை!

விஜய் சேதுபதி தற்போது தமிழில் சுமார் 12 திரைப் படங்களில் நடித்து வரும் நிலையில் மலையாளத்தில் ’19 (1)(a)’ என்ற திரைப்படத்திலும் அவர் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல மலையாள இயக்குனரான இந்து இயக்கவிருக்கும் இத் திரைப் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நித்யாமேனன் நடிக்கவுள்ளார்.

இவர் மணிரத்னம் இயக்கிய ‘ஓகே கண்மணி’ உட்பட பல தமிழ், மலையாள திரைப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்சேதுபதி, நித்யாமேனனுடன் இந்திரஜித் சுகுமரன், இந்திரன்ஸ் உட்பட பலர் இப் படத்தில் இணைந்து நடிக்கின்றனர் என்பதும் இந்த படத்தை ஆண்டோ ஜோசப் பிலிம் கம்பெனி என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ள என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் விஜய் சேதுபதியின் ‘96’ உட்பட ஒரு சில படங்களுக்கு இசையமைத்துள்ள கோவிந்த் வசந்தா’ இத் திரைப் படத்திற்கும் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் இத் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் அடுத்த ஆண்டு இப் படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.