அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் முடிவுகள் தொடர்பான அறிவிப்பு!

download 15
download 15

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் நியூயோர்க், வெர்மான்ட், மசாசூட்ஸ், நியூஜெர்சி, கனக்டிகட், டெலவர் மாநிலங்களில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார்.

 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒரு வேட்பாளர் 270 இடங்களை கைப்பற்ற வேண்டும் என்கின்ற நிலையில் தற்போதைய நிலவரப்படி ஜோ பிடன் முன்னிலையில் உள்ளார்.

தற்போதுவரை 209 இடங்களை கைப்பற்றியுள்ள ஜோ பிடனுக்கு 45,181,173 வாக்குகள் கிடைத்துள்ளன. இது 48% ஆகும்.

இதேவேளை டொனால்ட் ட்ரம்ப் 47,547,291 வாக்குகளை பெற்று 118 இடங்களை கைப்பற்றியுள்ளார். இது 50.4% விதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செயின்ட் லூயிஸ் நகரத்தின் தாயகமாக குறித்த பகுதியில் கடந்த ஐந்து ஜனாதிபதித் தேர்தல்களில் குடியரசுக் கட்சிக்கு மக்கள் வாக்களித்துள்ளனர்.

குறிப்பாக டொனால்ட் ட்ரம்ப் 2016 இல் ஹிலாரி கிளிண்டனை கிட்டத்தட்ட 19 சதவீத புள்ளிகளால் தோற்கடித்து வெற்றிபெற்றிருந்தார்.

2016 ஆம் ஆண்டில் டொனால்ட் ட்ரம்ப் குறித்த மாநிலங்களில் வெற்றிபெற்றமையினால் இம்முறையும் வெற்றிபெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.