தனியார் வைத்தியசாலையில் பி.சி.ஆர் சோதனை செய்தநபர் தனது வெளிநாட்டு தொழிலை இழந்த சோகம்!

தனியார் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டவர் கொரோனா நோயாளர் அல்ல என 19 நாட்களின் பின்னர் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்றாளர் என உறுதி செய்யப்பட்டு கஹவத்தை வெல்லதுர பிரதேசத்தை சேர்ந்த இரனவில கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட 2 பி.சி.ஆர் பரிசோதனைகளின் அவர் கொரோனா தொற்றாளர் அல்ல என உறுதியாகியமையினால் 19 நாட்களின் பின்னர் அவர் வீடு திரும்பியுள்ளார்.

வெளிநாட்டில் தொழிலுக்கு செல்வதற்காக இந்த நபர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் கொரோனா தொற்றாளர் என உறுதியாகியமையினால் அவரது மனைவி, பிள்ளைகள் இருவர் மற்றும் கஹவத்தை, வெல்லதுர பிரதேசத்தை சேர்ந்த 47 பேர் தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர் பரிசோதகைக்கு உட்படுத்தப்பட்டனர்.

தனியார் வைத்தியசாலை பி.சி.ஆர் பரிசோதனையின் நம்பகத்தன்மை தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்திற்கமைய இரண்டாவது முறையான இரனவில கொரோனா சிகிச்சை நிலையத்தில் இரண்டு முறை கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.

தனியார் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை காரணமாக அவர் தனது வெளிநாட்டு தொழிலையும் இழந்துள்ளார்.