பிரபல கட்சியில் இணையும் விஷால்

Vishal joins popular party
Vishal joins popular party

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஷால் 2004 ஆம் ஆண்டு வெளியான “செல்லமே” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

இதுவரை 40 திரைப்படங்களில் நடித்துள்ள இவர் பிரபல கட்சியொன்றில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகைகளான குஷ்பு, காயத்ரி ரகுராம், உள்ளிட்டோர் பிஜேபியில் இணைந்து வரும் நிலையில் விஷாலும் குறித்த கட்சியில் இணையவுள்ளதாக கூறப்பட்டன. எனினும் விஷால் திமுகவில் இணையவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின், விஷாலை அணுகி திமுகவில் இணைய வேண்டும் என்று கூறியதாகவும் அதற்கு விஷால் சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. விஷால் திமுகவில் இணைந்தால் முக்கிய பொறுப்பு கொடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.