50 செயற்கை சுவாசக்கருவிகள் : நன்கொடை வழங்கிய சிங்கப்பூர்

download 5 2
download 5 2

கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கான சிகிச்சைகளை மேலும் வலுப்படுத்துவதற்கு பங்களிப்புச்செய்யும் நோக்கில் 80 மில்லியன் ரூபா பெறுமதியான 50 செயற்கை சுவாசக்கருவிகளை சிங்கப்பூர் நன்கொடையாக வழங்கியிருக்கிறது.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு ஆரம்பத்திலிருந்தே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களும் அமைப்புக்களும் சுகாதார அமைச்சிற்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன.

அந்தவகையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கான சிகிச்சைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் சிங்கப்பூரின் “டீம்செக்” நிறுவனத்தினால் 80 மில்லியன் ரூபா பெறுமதியான 50 செயற்கை சுவாசக்கருவிகள் சுகாதார அமைச்சிற்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. இந்த சுவாசக்கருவிகள் அவுஸ்திரேலியாவில் உற்பத்தி செய்யப்பட்டவையாகும்.