அமெரிக்க தேர்தலும் மூக்குத்தி அம்மனும்!

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜோபிடன் வெற்றி பெற்றுள்ளார் என்பதும், துணை ஜனாதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் தெரிவு செய்யப்பட்டுமுள்ள நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ படத்தை இயக்கிய ஆர்.ஜே .பாலாஜி தனது சமூக வலைத்தள பக்கத்தில் ’மூக்குத்தி அம்மன்’ துணையால் வெற்றி பெற்ற அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபருக்கு வாழ்த்துக்கள் என பதிவு செய்துள்ளார்.

மேலும் மூக்குத்தி அம்மன் அவர்கள் இருவருக்கும் ஆசி வழங்குவது போன்ற புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். ஆர்.ஜே.பாலாஜியின் இந்த விளம்பர யுக்தி அனைவரையும் கவர்ந்துள்ளது.

மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் வரும் 14ஆம் திகதி ஓடிடியில் தீபாவளி விருந்தாக வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.