மீண்டும் இணைகிறது ஜிவி பிரகாஷ் – தனுஷ் கூட்டணி!

dhanush gv prakash 1280x720 1
dhanush gv prakash 1280x720 1

கார்த்திக் நரேன் இயக்கவுள்ள நடிகர் தனுஷின் 43 ஆவது திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார் என அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் குறித்த திரைப்படத்திற்கான 3 பாடல்களை முடித்துவிட்டதாகவும் நான்காவது பாடலையும் கம்போஸ் செய்யும் பணியில் தற்போது இருப்பதாகவும் ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

ஜிவி பிரகாஷின் அட்டகாசமான இத் தகவல் காரணமாக தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் இப் படத்தின் பாடல்கள் விரைவில் அல்பமாக வெளியாகும் என்றும் அந்த தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருங்கள் என்றும் ஜீவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.