பாலுடன் சில பொருட்களை சேர்த்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்!

201903011403371175 milk products effects SECVPF
201903011403371175 milk products effects SECVPF

மீனை, பாலுடன் ஒன்றாக எடுத்துக்கொள்வது தவறு. மீன் மற்றும் பாலை ஒன்றாக எடுத்துக்கொள்ளும்போது ரத்தம் கெட்டுப்போய், உடலின் நுண்ணியப் பாதைகள் அடைக்கப்படுகின்றன. சீரான ரத்த ஓட்டம் பாதிப்பு அடையும்.

அதேபோல், பாலுடன் வாழைப்பழத்தைச் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. இதனால், உடலில் சளி அதிகம் தேங்கும்.

தர்பூசணி சாப்பிட்ட பிறகு பால் குடித்தால், அது அசெளகரியம் தருவதோடு, வாயுத்தொல்லையையும் ஏற்படுத்தும்.

பால் மற்றும் முட்டை இரண்டிலும் அதிகப் புரதம் இருப்பதால், இரண்டையும் ஒன்றாக எடுத்துக்கொண்டால், செரிமானப் பிரச்சனைகள் ஏற்படும்.

கீரையும் பாலுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகளில் ஒன்று. கீரைகளில் செல்லுலோஸ் அதிகம் உள்ளதால், செரிமானம் நடைபெற இயல்பாகவே அதிக நேரம் எடுக்கும். கீரையில் உள்ள டானின், பாலை திரளச்செய்வதால், செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.