இன்று திருமண பேச்சு வெற்றி பெறும் ராசிக்காரர் நீங்களா?

8
8
mesam
mesam

மேஷ-மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றிகரமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு இருந்து வந்த மந்தநிலை மாறும். தொழில் சூடு பிடிக்கத் தொடங்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படாமலிருக்க விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

risapam

ரிஷபம்- ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகள் ஒவ்வொன்றும் பலன் தரும் வகையில் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலை நிலவும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மேலும் வலுபெற வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கை தேவை.

mithunam

மிதுனம் -மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவலைகள் நீங்கி புத்துணர்வு பெறுவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கப் பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டு தொழிலாளர்கள் உடனான பிரச்சனைகள் நீங்கும். உத்யோகத்தில் சிறப்பான ஒரு முன்னேற்றத்தை காணலாம்.

kadakam

கடகம் -கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிமையான சூழலில் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நண்பர்களின் வட்டம் விரியும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் பண வரவு கிடைப்பதில் காலதாமதம் ஏற்படலாம். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.

சிம்மம்- சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். நீங்கள் நினைக்கும் விஷயங்கள் நல்லபடியாக நடக்கும். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகள் வெற்றி பெறும். கணவன் மனைவி இடையே இருக்கும் பிரச்சனைகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் புதிய யுக்திகளை கற்கும் சந்தர்ப்பங்கள் அமையும்.

கன்னி -கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானம் தேவை. நீங்கள் எதிர்பார்க்கும் சில விஷயங்கள் நேர் மாறாக நடக்க வாய்ப்புகள் உண்டு. சுபகாரிய முயற்சிகளில் காலதாமதம் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் ஒற்றுமை பலப்படும். தொழிலாளர்களுக்கு எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்க பெறும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு புதிய முதலீடுகள் செய்து லாபம் காண கூடிய வாய்ப்புகள் அமையும்.

thulam

துலாம்- துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நீங்கள் நினைத்த காரியங்கள் கை கூடி வர யோகம் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவ அனுசரித்து செல்வது நல்லது.

scorpio 08 1
scorpio 08 1

விருச்சிகம்- விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதிக்கக் கூடிய வாய்ப்புகள் இருப்பதால் மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர புதிய உத்திகளை கையாள்வது அவசியமாகும். நண்பர்களின் அறிமுகம் முன்னேற்றத்தை உண்டாக்கும் வகையில் அமையும்.

thanu

தனுசு -தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் நிதானத்துடன் செயல்பட வேண்டியது அவசியமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் உண்டாகும். புதிய தொழில் செய்ய முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிப்பதால் டென்சனுடன் காணப்படுவார்கள்.

magaram

மகரம்- மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் உத்வேகத்துடன் செயல்படுத்தி காட்டுவீர்கள். உங்களுடைய சுயமரியாதை சீர் குலைக்கும் வண்ணம் ஒரு சிலர் நடந்து கொள்வார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவில் லாபம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டால் முன்னேற்றம் நிச்சயம்.

kumpam

கும்பம் -கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவலைகள் நீங்கி தெளிவு பெறுவீர்கள். புதிய முயற்சிகளுக்கு உங்களுடைய குடும்பத்தினரின் ஆதரவு பரிபூரணமாக கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு மன மகிழ்ச்சியை உண்டாக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஏற்றம் காணலாம்.

meenam

மீனம் -மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்ததை சாதிக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. சக பணியாளர்களிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கும். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. சுயதொழிலில் நினைத்ததை விட அதிக லாபம் காணலாம். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.