இன்று கணவன் -மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும் ராசிக்காரர் நீங்களா?

1
1
mesam
mesam
  • மேஷ ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். உற்சாகமான நாள்.

ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள்.வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்

மிதுன ராசிக்காரர்களுக்கு  சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கேட்ட இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

கடக ராசிக்காரர்களுக்கு குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்புகிடைக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். நினைத்தது நிறைவேறும் நாள்.

கன்னி ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்தவைகளில் சிலதள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒருவேலை முடியும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். புதுவேலை கிடைக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.

துலாம் ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். சொத்து பிரச்சினைக்கு சுமுக தீர்வு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக
ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பீர்கள். திடீர் பணவரவு உண்டு. விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்
பார்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். இனிமையான நாள்.

தனுசு ராசிக்காரர்களுக்கு ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். வியாபாரத்தில்வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் சகஊழியர்களால் அவ்வப்போது டென்ஷன் ஆகாதீர்கள். தானுண்டுதன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.

மகர ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். பழைய கடனைத் தீர்க்கமுயற்சிசெய்வீர்கள். ஆடம்பரச்செலவுகளால் சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.

kumpam
  • கும்ப ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமைபிறக்கும். மற்றவரின் மனநிலையைஉணர்ந்து பேசும் பக்குவம் உண்டாகும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில்சகஊழியர்கள்பாராட்டுவார்கள்.நல்லனநடக்கும் நாள்.
  • மீன ராசிக்காரர்களுக்கு உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களிடம் முக்கியவிஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்
    கள். துணிச்சலால் வெற்றி பெறும் நாள்.