இன்று சந்திராஷ்டமம் ஆட்சி புரியும் ராசிக்காரர் நீங்களா?

06
06
mesam
mesam
  • மேஷ ராசிக்காரர்களுக்கு குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள்.  மற்றவர்களுக்காக சிலசெலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வீட்டை அழகுபடுத்துவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும்.  உத்தியோகத்தில்உங்களின்நிர்வாகத்திறமைவெளிப்படும். இனிமையான நாள்
  • ரிஷப ராசிக்காரர்களுக்கு தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள்.  உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
  • மிதுன ராசிக்காரர்களுக்கு குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள்.  மற்றவர்களுக்காக சிலசெலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வீட்டை அழகுபடுத்துவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும்.  உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். இனிமையான நாள்
  • கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் திடீர் திடீரென்று எதையோ இழந்ததை போல் இருப்பீர்கள்.பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும்.   மற்றவர்களை முழுமையாக நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களிடம் வளைந்து கொடுத்து போவது நல்லது. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள் .
  • சிம்ம ராசிக்காரர்களுக்கு உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள்.  சகோதரவகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த மின்னணு மின்சாரபொருட்கள் வாங்குவீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும்.  தாய் வழியில் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில்  சக ஊழியர்கள் உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
  • கன்னி ராசிக்காரர்களுக்கு சமயோசிதமாகவும் சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள்.  பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்களால் நன்மையும், எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும் . அமோகமான நாள்.
  • துலாம் ராசிக்காரர்களுக்கு குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.  அக்கம்-பக்கம்வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும்.    புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால்இருந்து வந்த பிரச்சினைகள் விலகும்.  கனவு நனவாகும் நாள்.
  • விருச்சிக ராசிக்காரர்களுக்கு முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்.  தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும்.வேலை கிடைக்கும். பழையகடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்தசலுகைகள்கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
  • தனுசு ராசிக்காரர்களுக்கு குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள்.  பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.  சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள்.  வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள்.  உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.
  • மகர ராசிக்காரர்களுக்குகுடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தோற்றப்பொலிவு கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள்.  புது நட்பு மலரும். பழைய சிக்கலில் ஒன்று தீரும்.அலுவலகத்தில் மரியாதை கூடும். தடைகள் உடைபடும் நாள் .
  • கும்ப ராசிக்காரர்களுக்கு ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் அதிகமாகும்.  நீங்கள் எதைப் பேசினாலும் அதைஎல்லோரும் தவறாக புரிந்து கொள்வார்கள்.  தலைச்சுற்றல் முழங்கால் வலி வந்து விலகும்.  யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள்.  அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.
  • மீன ராசிக்காரர்களுக்கு கணவன் மனைவிக்குள் வீண் விவாதம் வந்து செல்லும்.  ஆடம்பர செலவுகளால் சேமிப்பு கரையும்.  சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து நீங்கும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம் . வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.