இன்று சிந்தித்து செயற்பட வேண்டிய ராசிக்காரர் நீங்களா

05 1
05 1
  • மேஷ ராசிக்காரர்களுக்கு ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள் ஏமாற்றங்களை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக்காட்டுங்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
  • ரிஷப ராசிக்காரர்களுக்கு கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். சகோதர வகையில் ஆரோக்கியமான விவாதங்கள் வரக்கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். போராடி வெல்லும் நாள்.
  • மிதுன ராசிக்காரர்களுக்கு ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சகஊழியர்கள்பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
  • கடக ராசிக்காரர்களுக்கு சொன்ன சொல்லை காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிறுவாகத்திறமை வெளிப்படும். முயற்சியால் முன்னேறும் நாள்.
  • சிம்ம ராசிக்காரர்களுக்கு கணவன் – மனைவிக்குள் அன்னியோன்யம் பிறக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். நீண்ட நாட்களாக தள்ளி போன காரியங்கள்  இன்று  முடியும். வெளியூரில் இருந்துநல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மனசாட்சி படி செயல்படும் நாள்.
  • கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள் வந்து போகும். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
  • துலாம் ராசிக்காரர்களுக்கு புதிய எண்ணங்கள் செயல்வடிவம் பெறும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை உணர்வீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
  • விருச்சிக ராசிக்காரர்களுக்கு குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வேற்று மதத்தவர் உதவுவார். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரிகள் சாதகமாக நடந்து கொள்வார்கள். அமோகமான நாள்.
  • தனுசு ராசிக்காரர்களுக்கு புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூல் ஆகும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதிய முயற்சிகள் பலிதமாகும் நாள்.
  • மகர ராசிக்காரர்களுக்கு முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தாய்வழி உறவினர்களுடன் மனக்கசப்பு வந்து நீங்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவீர்கள். தடைகளை தாண்டி வெல்லும் நாள்.
  • கும்ப ராசிக்காரர்களுக்கு கம்பீரமாகப் பேசி காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் சாதகமாக நடந்து கொள்வார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.
  • மீன ராசிக்காரர்களுக்கு உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள் செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.