இன்றையநாள்( 23டிசம்பர்) உங்களுக்கு எப்படி?

Up Country Lindhula Hospital 2 8
Up Country Lindhula Hospital 2 8

மேஷம்

சந்திராஷ்டமம் தொடர்வதால், எதிர்பார்ப்புகள் தாமதமாக முடியும். குடும்ப அந்தரங்க விஷயங்களை, வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சாலைகளைக் கவனமாகக் கடந்து செல்லுங்கள். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். முன் கோபத்தைத் தவிர்க்க வேண்டிய நாள்.

ரிஷபம்

ரிஷபம்: பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்யாணத்தில் முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில், மூத்த அதிகாரிகள் அறிவுரை தருவார்கள். நன்மை கிட்டும் நாள்.

மிதுனம்

பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில், செல்வாக்கு கூடும். அரசால், ஆதாயம் உண்டு. வழக்கு விஷயங்களில், சாதகமாகத் தீர்ப்பு வரும். வியாபாரத்தில், தனலாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள். அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். அமோகமான நாள்.

கடகம்

வருங்காலத்தை நினைவில் கொண்டு புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். பிள்ளைகளின். தனித்திறமைகளைக் கண்டறிந்து முன்னேற்றுவீர்கள். சிக்கனமாக செலவழித்துச் சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில், சில சூட்ச்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.

 சிம்மம்

பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பழைய கடனைத் தீர்க்க, முயற்சி செய்வீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பயணங்களால் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி, முன்னேறுவீர்கள். தடைகளைத் தாண்டி முன்னேறும் நாள்.

 கன்னி

தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள், உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால், ஆதாயம் உண்டு. வியாபாரத்தில், அதிரடியாக முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள் வெற்றி பெறும் நாள்.

துலாம்

கணவன், மனைவிக்குள் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். இதுவரை இருந்த மோதல்கள் விலகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். புதியவர்கள் நண்பர்கள் ஆவார்கள். நீண்டநாள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். முன்னேற்றம் பெறும் நாள்.

விருச்சிகம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால். ஓய்வெடுக்கக்கூட முடியாத படி வேலைச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தாருடன் இணக்கமாகச் செல்லவும். சிலரின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதன் மூலம், சச்சரவுகளில் சிக்குவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. இடம், பொருள், ஏவல் அறிந்துசெயல்பட வேண்டிய நாள்.

தனுசு

சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். உடன் பிறந்தவர்களால், அலைச்சல், வீண் செலவுகள் வந்து போகும். தாழ்வு மனப்பான்மை வந்து நீங்கும். உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. வியாபாரத்தில் முதலீடு செய்வதால் லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். போராடி வெல்லும் நாள்.

மகரம்

உங்களுக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும், சரியாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். பெற்றோரின் ஆதரவு பெருகும். பழைய கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சாதிக்கும் நாள்.

கும்பம்

உங்கள் செயல்களில் கண்ணும், கருத்துமாகச் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். காரிய சாதனை செய்யும் நாள்.

மீனம்

கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள், அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் தானாகமுன் வந்து உதவுவார்கள். மனசாட்சிபடி செயல்படும் நாள்.