இன்றைய நாள் உங்களுக்கு எப்படி அமைந்திருக்கு

27 1
27 1
  • மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று விருந்தினர் வருகை அதிகரிக்கும். சொத்துப் பிரச்னைக்கு சுமுகமான தீர்வு காண்பீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.
  • ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றுகுடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
  • மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள்.. வளைந்து கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.
  • கடக ராசிக்காரர்களுக்கு இன்றுவேலைச்சுமையால் உடல் அசதி மனச்சோர்வு வந்து நீங்கும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்து கொள்ளுங்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
  • சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். சபைகளில் முதல் மரியாதை கிடைக்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டு கொடுப்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். மதிப்பு மரியாதை கூடும் நாள்.
  • கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.
  • துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி அமைதி அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் எல்லாம் இனிதே முடியும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். மகிழ்ச்சியான நாள்.
  • விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றுசந்திராஷ்டமம் இருப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். மற்றவர்கள் பிரச்னையில் தலையிடுவதால் வீண் பழிச்சொல் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பழையசரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.
  • தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஆடை ஆபரணம் சேரும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். தாயாரின் உடல் நிலை சீராகும். தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் வேலைகளை உடனடியாக முடிப்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
  • மகர ராசிக்காரர்களுக்கு இன்று வாகன வசதிப் பெருகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.
  • கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். நண்பர்கள், உறவினர்கள் உதவிக்கரமாக இருப்பார்கள். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் சலுகைகளை பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.
  • மீன ராசிக்காரர்களுக்கு இன்று பயணங்களால் பயனடைவீர்கள். தாயாருக்கு மருத்துவ செலவுகள் வந்து போகும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.