- மேஷம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். நண்பர்கள், உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள் .
- ரிஷபம்: சந்திராஷ்டமம் இருப்பதால் முன் கோபத்தை குறையுங்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். வியாபாரத்தில் பற்றுவரவு சுமார்தான். உத்தியோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக்காட்ட வேண்டாம். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.
- மிதுனம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார்.மகிழ்ச்சி பெருகும் நாள்.
- கடகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும் . பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும் . வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.
- சிம்மம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பழைய பிரச்சினைகளைத் தீர்ப்பீர்கள்.உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள் . நினைத்தது நிறைவேறும் நாள்.
- கன்னி: சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். பணப் பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பாராத நன்மை உண்டாகும் நாள்.
- துலாம்: குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள் . சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.
- விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புதுமுடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.உறவினர்கள் வீடு தேடி வருவார்கள் .வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் முக்கிய பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.
- தனுசு: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. பொறுமை தேவைப்படும் நாள்
- மகரம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.
- கும்பம்: சமயோசிதமாகவும் சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர் நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சாதிக்கும் நாள்.
- மீனம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.