சபாநாயகருக்கு கொரோனா

Mahinda Yapa Abeywardena
Mahinda Yapa Abeywardena

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு கொவிட் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று (28) மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையின் பின்னர், சபாநாயகருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

சபாநாயகர் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் தனிமைப்படுத்தப்படுவாரென தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி கடந்த சில நாட்களாக சபாநாயகருடன் நெருங்கிப் பழகியவர்களை இனங்கண்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.