இன்று விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முடிவதால் என்ன பலன்கள்!!

1 ad
1 ad

திருக்கணித பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி தை 10ஆம் திகதி அதாவது ஜனவரி 24 இன்று நிகழப்போகிறது. மகரம் ராசி சனிபகவானின் சொந்த வீடு இந்த இடப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கும் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படப்போவதில்லை.

இந்த சனிப்பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முடிந்து தைரிய சனி ஆரம்பிக்கிறது.

நவ கிரகங்களில் சனிபகவான் நீதிமான். நியாயமாக நடப்பவர்களுக்கு சனிபகவான் எந்த சங்கடமும் தரமாட்டார்.

தவறு செய்பவர்களை மட்டுமே சனிபகவான் தண்டிப்பார் எனவே சனிபகவானைப்பார்த்து யாரும் பயப்பட வேண்டாம்.

சனிபகவான் தண்டனைகளின் மூலம் அனுபவ பாடங்களை கற்றுக்கொடுப்பார் சனிபகவான்.

சரியில்லாத இடத்தில் சஞ்சரிக்கும் போது சில பரிகாரங்களை செய்தால் போதும் பலன்தரும் பரிகாரங்களும் இருக்கின்றன.

சனி பார்வை என்ன செய்யும் சனிபகவான் நியாயவான் எனவேதான் அவருக்கு இறைவன், கலபுருஷ தத்துவத்தில் ஜீவனம் மற்றும் ஆயுள் ஆகிய பணிகளை செய்ய கட்டளையிட்டுள்ளார்.

சனிபகவானுக்கு, 3 , 7 , 10 இடப்பார்வைகள் உண்டு இந்த சஞ்சாரம் மற்றும் பார்வைகளால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

விருச்சிக ராசிக்கு ஏழரை சனி முடிகிறது. ஏழரை ஆண்டுகாலமாக சனிபகவான் உங்களை பிடித்து ஆட்டி வைத்தார்.

இனி வசந்த காலம்தான். நிறைய கஷ்டங்களை கொடுத்து அனுபவ பாடங்களை புரிய வைத்து விட்டார் சனிபகவான்.

குடும்பத்தில் பிரச்சினை, கடன், பணப்பிரச்சினை, அவமானம், சொந்த வாழ்க்கையில் நிறைய கஷ்டப்பட்ட விருச்சிக ராசிக்காரர்களுக்கு இனி நல்லது நிறைய நடக்கும்.

உங்களுடைய தைரியம் கூடும். பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிகக் கவனம் செலுத்துங்கள். நேரத்திற்கு சாப்பிடுங்கள். நீரிழிவு, ரத்தகொதிப்பு இருப்பவர்கள் சரியான நேரத்திற்கு சாப்பிடுங்கள். எதிரிகளால் தொல்லைகள் குறையும். எதையும் தைரியமாக சந்திக்கும் ஆற்றலும் சந்தர்ப்பமும் அமையும்.

உங்களுடைய செயல்பாடுகள் இனி வெற்றிகளை நோக்கியே நகரும். உங்களுடைய வேதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றுவீர்கள்.

சனியின் சஞ்சாரம் தைரிய ஸ்தானத்தில் அமர்ந்து உங்களின் மதிப்பு மரியாதைகளை உயர்த்துவார். உறவினர்கள் சொந்த பந்தங்கள் இனி நாடி வருவார்கள்.

நீங்க தொட்டதெல்லாம் துலங்கும். சகலவிதமான வெற்றிகளும் தேடி வரும். பணப்பிரச்சினை தீரும். செல்வம் செல்வாக்கு அதிகமாகும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும்.

நீங்கள் இதுநாள் வரை பட்ட கடன்கள் படிப்படியாக அடைபடும். இளைய சகோதரர்களின் பாசமும் நேசமும் அதிகமாகும்.

தன்னம்பிக்கையோடு எதையும் செய்து முடிப்பீர்கள். தகவல் தொடர்புத்துறையின் மூலம் வெற்றிச் செய்திகள் தேடி வரும்.

சனிபகவான் உங்க சுக ஸ்தான அதிபதி, பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி. சொந்த வீடு யோகம் தேடி வருகிறது. புதிய வண்டி வாகனம் வாங்குவீர்கள்.

வசதிகள் தேடி வரும். இனி சொந்தங்களுடன் கூடி இன்ப சுற்றுலா செல்வீர்கள். சனிபகவான் பார்வை உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டின் மீது விழுகிறது. ஐந்தாம் வீடு, பாக்ய ஸ்தானங்களின் மீது விழுவதால் உங்களின் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். நிறைய சுப செலவுகள் தேடி வரும்.

பிள்ளைகளினால் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். பிள்ளைகளினால் நிறைய நல்ல செய்திகள் தேடி வரும் பூர்வீக சொத்துக்கள் மூலம் உங்களுக்கு இனி லாபம் கிடைக்கும்.

புதிய வேலைகள் கிடைக்கும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். நிறைய சம்பளத்துடன் கூடிய வேலை வெளிநாட்டில் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

உங்க ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை கிடைப்பதால் நீங்கள் பட்ட அவமானங்கள் முடிவுக்கு வரப்போகிறது.

பாக்யங்கள் தேடி வரப்போகிறது. அப்பாவினால் நிறைய நன்மைகள் கிடைக்கும். குல தெய்வத்தின் அருள் கிடைக்கும். வீடு வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். குல தெய்வத்தின் அருள் உங்களுக்குக் கிடைக்கிறது. புனித தலங்களுக்கு சென்று இறைவழிபாடு செய்வீர்கள்.

தொழிலதிபர்கள் இலக்குகளை அடைவீர்கள். வேலை, தொழிலில் இடமாற்றம் ஏற்படும். புதிய முதலீடுகள் லாபத்தை தரும்.

சனிபகவானின் ஆசி உங்களுக்கு கிடைக்கும். விரைய செலவுகள் முடிவுக்கு வரக்கூடிய காலம் வந்து விட்டது. சொத்து சுகம் அதிகம் சேரும். தினமும் ஆஞ்சநேயரை வணங்குங்கள்.

சனிக்கிழமைகளில் அசைவ உணவு சாப்பிட வேண்டாம். சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள். கால பைரவரை வணங்குங்கள்.

பித்ரு காரியங்களை ஆண்டு தோறும் செய்யுங்கள். ஏழைகளுக்கு அன்னதானம் செய்யும் இனி வரப்போகிற ஆண்டுகளில் அபரிமிதமான பலன்களை அடைவீர்கள். ஏழரை சனியால் சாவின் விளிம்பு வரை சென்று மீண்டு வந்திருப்பீர்கள். உங்கள் கஷ்டங்கள் நீங்கி விட்டாலும் நீங்கள் படித்த பாடங்களைக்கொண்டு வாழ்க்கையை சந்தோஷமாக வாழுங்கள்.