உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு!

2 2 8 4
2 2 8 4

மேஷம்: சந்திராஷ்டமம் தொடங்கி இருப்பதால் எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும். உங்களுடைய ரகசியங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். சாலை பயணங்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். வியா பாரத்தில் வேலையாட்களால் பிரச்சனை உருவாகும். கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

ரிஷபம்: கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவி வழியில் ஆதரவும் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களால் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவார்கள். மகிழ்ச்சி யான நாள்.

மிதுனம்: உடல் ஆரோக்கியம் மேம் படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். அரசால்
அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் வரும். உத்தியோகத்தில் உயரதிகாரி மெச்சும்படி நடந்துக் கொள்வீர்கள். அமைதியான நாள்.

கடகம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வீடு வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். எதிர்பார்ப்பு
கள் பூர்த்தியாகும் நாள்.

சிம்மம்: உங்களின் துணிச்சலான செயல்பாடுகள் மற்றவர்களால் பாராட்டப்படும். உடன்பிறந்தவர் கள் உறுதுணையாக இருப் பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். முயற்சி யால் முன்னேறும் நாள்.

கன்னி: கணவன் மனைவிக்குள் இருந்த மனஸ்தாபங்கள் மகிழ்ச்சி பெருகும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். நீண்ட நாள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை மதிப் பார். உற்சாகமான நாள்.

துலாம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.

விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும். மற்றவர்களிடம் அனுசரணையாக செல்வது நல்லது. மற்றவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் பிரச்சினைகளில் சிக்கி கொள்ள வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்படவேண்டிய நாள்.

தனுசு: உங்கள் செயல்பாடுகளில் தடைகளும் பிரச்சினைகளும் வந்து நீங்கும். வீண் அலைச்சல் உண்டாகும். அனாவசியமான செலவுகள் வந்து போகும். தாழ்வு மனப்பான்மை உண்டாகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். போராடி வெல்லும் நாள்.

மகரம்: வாழ்வில் வெற்றி பெறுவதற்கான புதிய வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் கிடைக்கும். பெற்றோரின் ஆதரவும் உண்டாகும். பழைய கடன் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வருவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். புகழ் கூடும் நாள்.

கும்பம்: உங்கள் செயல்களில் கண்ணும் கருத்துமாக செயல் பட்டு முன்னேறுவீர்கள். உறவினர் கள் நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். மனைவி வழியில் ஆதரவு கிடைக்கும். வியா பாரத்தில் புதிய முயற்சிகள் கைகூடும். உத்தி யோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். முயற்சியால் முன்னேறும் நாள்.

மீனம்: இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் நீங்கி மாற்றங்கள் ஏற்படும். மனதில் மகிழ்ச்சி உருவாகும். எதிலும் துடிப்புடன் செயல் படத் தொடங்குவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் வரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும் நாள்.