01.04.2020 ராசி பலன்கள்

images 6
images 6

மேஷம் – உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டு. சம்பள உயர்வு அறிவிக்கப்படும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர்.

ரிஷபம் – வெளியூரிலிருந்து உறவினர் வருவார்கள். செயற்கரிய செயலை செய்து அனைவரும் பாராட்டும்படி செயல்படுவீர்கள். கடினமாக உழைத்து மேலதிகாரியிடம் நன்மதிப்பை பெறுவீர்கள். வியாபாரத்தில் மேன்மையும், வளர்ச்சியும் கிடைக்கும். வேண்டாத செலவுகளை குறையுங்கள்.

மிதுனம் – குழந்தைகள் பற்றிக் கவலை வேண்டாம். பொருளாதார நிலைமையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சேமிப்பு அதிகம் ஆகும். எதிர் இனத்தவர்களால் லாபம் அதிகரிக்கும். காதல் விவகாரத்தில் பயம் நீங்கும். வெளிநாட்டுப் பயணம் உண்டு.

கடகம் – குடும்பப் பிரச்னைகள் பற்றிக் கவலை பட வேண்டாம். நிலைமை மாறும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். தந்தையின் ஆதரவு உண்டு. தாயின் அன்பு, ஆசி பெறுவீர்கள்.

சிம்மம் – மன நிம்மதியும், அமைதியும் நிலைத்திருக்கும். திருமண விவகாரங்களில் தடங்கல்கள் குறையும். கொடுக்கல், வாங்கலில் உஷாராக இருக்க வேண்டும். பங்கு மார்க்கெட் விவகாரங்களில் மிகுந்த கவனம் தேவை. பணிவான செயல்களால் ஆசி பெறுவீர்கள்.

கன்னி – குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் அன்பும் அதிகரிக்கும். நண்பர்களும் உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். முதலீட்டு விஷயத்தில் கவனம் தேவை. மாணவர்கள் பிரகாசிப்பார்கள். கைமாற்றுத் தருவதில் மிகவும் கவனமாக இருங்கள். ஒவ்வாத உணவை தவிர்ப்பது நல்லது.

துலாம் – பூர்வீக சொத்து கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய தொழிலில் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். வீடு, நிலம் வாங்குவதற்கு முன்பு நன்கு ஆலோசித்துச் செயல்படுங்கள். வேலை செய்யும் இடத்தில் பணிவாக இருப்பது நல்லது. திருமணம் கூடி வரும்.

விருச்சிகம் – சுபச்செயலில் முன்னேற்றம் காணப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தைரியமாக இருப்பீர்கள். தம்பதிகளிடையே இருந்த பிரச்சினைகள் தீரும். சிக்கனமாக இருத்தல் அவசியம். புதுப்புது விஷயங்களைக் கற்பீர்கள். தர்மச் செயல்கள் செய்வீர்கள்.

தனுசு – பண வரவு நல்லபடியாக இருக்கும். எனினும் சிக்கனமாக செலவு செய்யுங்கள். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை நடத்துவர். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். குழந்தைகள் நல்ல செய்தி கொண்டு வருவார்கள். வெளிநாட்டுப் பயணம் உண்டு.

மகரம் – விரோதிகள் ஓடி ஒளிவார்கள். நட்பில் ஏற்பட்ட விரிசல் நீங்கும். சுபச்செலவுகள் மகிழ்ச்சி தரும். குழந்தைகள் பரிசு வாங்குவார்கள். உடன்பிறந்தோரைச் சந்திப்பீர்கள். குலதெய்வ வழிபாடு அமையும். மாணவர்கள் படிப்பில் வெற்றி பெறுவார்கள்.

கும்பம் – மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். பலவகைகளில் பணம் வரும். புதிய வேலை கிடைக்கும். பேச்சினால் பிரச்னை ஏற்படாமல் கவனமாக இருங்கள். உழைத்து முன்னேறுவீர்கள். சோம்பலைத் தவிர்க்க வேண்டும். வருமானங்களும், லாபங்களும் அதிகரிக்கும்.

மீனம் – குழந்தைகளின் வாழ்வில் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். சான்றோரின் ஆசி கிடைக்கும். எந்தப் பிரச்னையும் வந்த வேகத்தில் மறையும். அரசாங்க வேலை கிடைப்பதற்கான செய்தி வரும். தந்தைக்கு நன்மை அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் கூடும்.