இன்று (21.08.2020)எந்த ராசியினருக்கு அதிஸ்டம்!

Daily Prediction Seithi Churul
Daily Prediction Seithi Churul
aries 01 5
aries 01 5

மேஷம்:-மேஷ ராசிக்காரா்களே குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிகொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ராஜதந்திரத்தை உடைத்து எறிவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

taurus 02 5
taurus 02 5

ரிஷபம்:–  ரிஷப ராசிக்காரா்களே நீங்கள் உங்கள் குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். புதுமை படைக்கும் நாள்.

gemini 03 5
gemini 03 5

மிதுனம்:- மிதுன ராசிக்காரா்களே உங்களுக்கு பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். உழைப்பால் உயரும் நாள்.

cancer 04 3
cancer 04 3

கடகம்:— கடக ராசிக்காரா்களே உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும். வியாபாரத்தில் புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லி தருவார். தைரியமாக முடிவுகள் எடுக்கும் நாள்.

leo 05 5
leo 05 5

சிம்மம்: –சிம்ம ராசிக்காரா்களே நீங்கள் கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். அழகும் இளமையும் கூடும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரி ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

virgo 06 5
virgo 06 5

கன்னி: –கன்னி ராசிக்காரா்களே உங்கள் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். சாதாரணமாகப் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்து போவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

libra 07 5
libra 07 5

துலாம்:–  துலாம் ராசிக்காரா்களே நீங்கள் எதிர்பார்த்தவை  தாமதமாக முடியும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். யாருக்கும் பணம் நகை வாங்கி தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து போங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

scorpio 08 4
scorpio 08 4

விருச்சிகம்:– விருச்சிக ராசிக்காரா்களே நீங்கள் சமயோஜித புத்தியால் எல்லாப் பிரச்சினைகளையும் எளிதாக சமாளித்து வெற்றி பெறுவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மதிப்பு கூடும் நாள்.

sagittarius 09 6
sagittarius 09 6

தனுசு: – தனுசு ராசிக்காரா்களே நீங்கள் கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள் பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். பிரபலங்களின் உதவி கிடைக்கும். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். முயற்சி பலிதமாகும் நாள்.

capricorn 10 6
capricorn 10 6

மகரம்: –மகர ராசிக்காரா்களே கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் சகஊழியர்கள் ஆதரிப்பார்கள். தடைகள் உடைபடும் நாள்.

aquarius 11 6
aquarius 11 6

கும்பம்:–கும்ப ராசிக்காரா்களே உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களை பகைத்து கொள்ள வேண்டாம். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

pisces 12 5
pisces 12 5

மீனம்:–மீன ராசிக்காரா்களே இன்று எந்த ராசியினருகடகு நீங்கள் தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் உதவிகள் உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் மதிப்பு கூடும். திறமைகள் வெளிப்படும் நாள்.