இன்றைய தினம் சந்தோசத்தில் திளைக்கப் போவது எந்த ராசி?

senganthal rasipalan 1 7
senganthal rasipalan 1 7
mesam
mesam

மேஷம்:-மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். நண்பர்கள், உறவினர்களால் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

risapam
risapam

ரிஷபம்:-ரிஷப ராசிக்காரர்களே உங்களுக்கு மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. விலை உயர்ந்தபொருட்கள் வாங்குவீர்கள். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்

mithunam
mithunam

.மிதுனம்:-மிதுன ராசிக்காரர்களே குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்கள், உயரதிகாரிகளிடம் செல்வாக்கும் கூடும். அமோகமான நாள்.

kadakam
kadakam

கடகம்: -கடக ராசிக்காரர்களே உங்களுக்கு குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை குறையும். வேற்று மதத்தவர்களின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

simmam
simmam

சிம்மம்:- சிம்ம ராசிக்காரர்களே எதிர்ப்புகள் அடங்கும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

kanni
kanni

கன்னி: –கன்னி ராசிக்காரர்களே குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று கொள்வார்கள். சொத்து பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

thulam
thulam

துலாம்:- துலாம் ராசிக்காரர்களே கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். அழகும் இளமையும் கூடும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

viru
viru

விருச்சிகம்: -விருச்சிக ராசிக்காரர்களே ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்ல கூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். வேலைச்சுமை மிகுந்த நாள்.

thanu
thanu

தனுசு: -தனுசு ராசிக்காரர்களே நீங்கள் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து நீங்கும். திடீர் பயணங்கள் மற்றும் செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

magaram
magaram

மகரம்: -மகர ராசிக்காரர்களே உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிறப்பான நாள்.

kumpam
kumpam

கும்பம்:-கும்ப ராசிக்காரர்களே நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை விட்டு அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர் நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

meenam
meenam

மீனம்:-மீன ராசிக்காரர்களே உங்கள் குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.