சந்தோசத்தை அள்ளிதரும் சனிக்கிழமை (31.10. 2020)இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

download 39
download 39

மேஷம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுங்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். அடுத்தவர்களை குறை கூறுவதை நிறுத்துங்கள். லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

ரிஷபம்

எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். தாயாருக்கு மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசிவசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் சகஊழியர்களிடம் கவனமாக பழகுங்கள். விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.

மிதுனம்

சொன்ன சொல்லைகாப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில் மரியாதை கூடும். சிறப்பான நாள்.

கடகம்

உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் முக்கிய விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்வார்கள். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

சிம்மம்

குடும்பத்தில் அமைதி நிலவும். அரைகுறையாக நின்றவேலைகள் முடியும். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய திட்டங்கள் நிறைவேறும் நாள்.

கன்னி

சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துபோகும். குடும்பத்தில் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டிவரும். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் அளவாக பழகுங்கள். பொறுமை தேவைப்படும் நாள்.

துலாம்

உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் தேவையான உதவிகளும் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். தாய்வழி உறவினர்களின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் சிலதந்திரங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பு கிடைக்கும். நல்லன நடக்கும் நாள்.

விருச்சிகம்

தேவைக்கு ஏற்ப பண வரவு உண்டு. பேச்சை குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். பழைய உறவினர் நண்பர்கள் தேடிவருவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் கமிஷன் ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். தொட்டது துலங்கும் நாள்.

தனுசு

குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சி மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். பிரார்த்தனையை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.

மகரம்

எதிர்பார்ப்புகள் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒருவேலை முடியும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் அமைதிநிலவும். உழைப்பால் உயரும் நாள்.

கும்பம்

குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். சொத்துவாங்குவது விற்பது சாதகமாக முடியும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளால் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அதிர்ஷ்டமான நாள்.

மீனம்

கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். தோற்றப் பொலிவு கூடும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போனவாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.