பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட இஞ்சி சாறு!

201606241132127059 Drinking ginger juice benefits once a week SECVPF
201606241132127059 Drinking ginger juice benefits once a week SECVPF

இஞ்சி சாறுடன் சிறிது கொத்தமல்லி அல்லது எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் பசியின்மையிலிருந்து விடுபடலாம். இஞ்சி சாறை எடுத்து அதனுடன் வெல்லம் சேர்த்து குடித்து வந்தால் வாத நோயிலிருந்து விடுபடலாம்.

கொதிக்க வைத்த இஞ்சி சாறை கொப்புளித்து வந்தால் பல் கூச்சத்தில் இருந்து விடுபடலாம். விடாத இருமல் தொல்லையிலிருந்தும் விடுபடலாம். வெங்காயச் சாறு மற்றும் இஞ்சி சாறை கலந்து குடித்தால் வாந்தி மற்றும் சர்க்கரை நோயிலிருந்தும் விடுபடலாம்.

குழந்தைகளுக்கு இஞ்சி சாறை எடுத்து வயிற்றில் தேய்த்தால் நல்ல செரிமானத்தை தரும். இஞ்சி சாறுடன் உப்பு சேர்த்து குடித்து வந்தால் மலச்சிக்கல் தொல்லை நீங்கும்.

பாலில் கலந்து குடித்தால் வயிற்று வலியை குறைக்கும் சக்தி உடையது. மேலும், குண்டாக இருப்பவர்களுக்கு ஒல்லியான தோற்றத்தையும் கொடுக்கும்.

தேன் மற்றும் இஞ்சி சாறை சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் வருவதை தடுக்கும். ஏனெனில், இஞ்சியில் ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளது. வெங்காய சாறு, தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து குடித்தால் ஆண்மை அதிகரிக்கும்.