சமைப்பதற்கு முன் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய வழிமுறைகள்!

before cooking 101220 400
before cooking 101220 400

சுத்தமாக இருப்பது நம் உடல் நலத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று. அது நம் ஆரோக்கியத்திற்கு நல்லது. எந்த ஒரு உணவு பொருளையும் கண்டிப்பாக கழுவி தான் உண்ண வேண்டும். அது போன்று எவற்றை எல்லாம் கண்டிப்பாக தண்ணீரில் கழுவி சாப்பிட வேண்டும் என இந்த பகுதியில் பார்க்கலாம்

குளிரூட்டப்பட்ட காய்கறிகள்

நாம் செய்யும் மிகப்பெரிய தவறுகளில் ஒன்று குளிர்சாதன பெட்டியில் இருந்து காய்கறிகள் அல்லது பழங்களை எடுத்தால் கழுவாமல் அப்படியோ உண்பது அல்லது சமைத்து விடுவோம். ஆனால் இப்படி செய்யும் போது அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் சாகாது.

அரிசி

அரிசியை சிலர் அவசரத்தில் நேரடியாக குக்கரில் போட்டு வேகவைத்துவிடுகிறோம் அல்லது சோம்பேரிதனத்தால் அரிசியை ஒரு முறை மட்டும் கழுவிவிட்டு வேகவைக்கிறோம். ஆனால் அது தவறு அரிசியை 3 அல்லது 4 முறை கண்டிப்பாக அலச வேண்டும்.

பால் தயிர்

கடையில் இருந்து பால் மட்டும் தயிர் போன்று பொருட்களை வாங்கும் போது அதனை நேரடியாக உபயோகிக்கவேண்டாம். ஏனென்றால் பலரும் அதனை தொட்டு பார்த்திருக்க வாய்ப்பு உண்டு, எனவே பாக்கெட்டில் இருந்தாலும் அதனை வெளிபுறத்தில் ஒரு முறை கழுவிவிட்டு பின் உபயோகிக்க பழகுங்கள்.

மீன்

மீன்களை கழுவாதீர்கள். எப்படி இருந்தாலும் அதனை நேரடியாக அதிக பட்ச வெப்பநிலையில் சமைப்போம் அப்போது அதில் உள்ள பாக்டீரியாக்கள் எல்லாம் அழிந்துவிடும். நீங்கள் பச்சை மீனை கழுவினால் அது உங்கள் கிச்சன் முழுவதும் பாக்டீரியாக்களை பரப்பிவிடும்.

முட்டைகோஸ்

முட்டைகோஸும் காளிபளவர் குடும்பத்தை சார்ந்ததே. எனவே அதனை நறுக்கிய பிறகு கண்டிப்பாக தண்ணீரில் சிறிதளவு வினிகர் ஊற்றி அலசி எடுத்து சமையுங்கள்.

குளிர்பானங்கள்

கேன்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை கண்டிப்பாக மேல்பிறத்தை கழுவியோ அல்லது துடைத்து விட்டோ அருந்துவது மிகவும் நல்லது. அதனை எடுத்து வரும் கண்டெயினர்களை யோசித்துப்பாருங்கள். எத்தனை மாசு, தூசிகளை கடந்து வந்திருக்கும் என்பதை குடோன்களில் இருக்கும் போது ஏற்பட்டிருக்கும் பாக்டீரிக்கள் என அதிகளவில் இருக்கும்.

ஆப்பிள்

ஒரு ஆப்பிள் சாப்பிடால் எந்த நோய்களும் நெருங்காது என மருத்துவர்கள் கூறுவர். ஆனால் இதனை அப்படியே கழுவிவிட்டு உண்ணாமல் பழங்களை பேக்கிங் சோடாவில் 12 நிமிடம் ஊறவைத்து பின் கழுவிவிட்டு சாப்பிடுங்கள். அதில் இருக்கும் கேமிக்கல்கள் அனைத்தும் எடுக்கப்படும்.