மூளையை இயக்கி சுறுசுறுப்படைய செய்யும் தோப்புக்கரணம்!

1526539586 5075
1526539586 5075

தோப்புக்கரணம் என்றாலே நம் அனைவரின் நினைவுக்கு வருவது பிள்ளையார்தான். பிள்ளையாரை வழிபடும்போது தோப்புக்கரணம் போட்டுவிட்டுத்தான் வருவோம்.

ஆசிரியர் தண்டனை தர தோப்புக்கரணம் போட சொல்லுவார். இவை மூளையை இயக்கி சுறுசுறுப்படைய வைக்கும் ஒருவித வைத்தியம். ஆம் தோப்புக்கரணத்தால் நமக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கிறது.

தோப்புகரணம் போடும்போது வலது கை இடது காதின் கீழ் பகுதியையும் இடது கை வலது காதின் கீழ் பகுதியையும் சற்று இருக்கமாக அழுத்தி பிடித்து முழுமையாக உட்கார்ந்து எழ வேண்டும். சுமார் 10 நெடிகள் உட்கார்து பின் எழ வேண்டும்.

வலது கை இடது காதையும் இடது கை வலது காதை பிடித்து கால்கள் நேராக வைத்து செய்து தோப்புக்கரணம் போடுவது ஒருவகை. வலது கை இடது காதையும் இடது கை வலது காதை பிடித்து கால் பின்னலாக வைத்து செய்வது இன்னொரு வகை. இருவர் சேர்ந்து செய்தல், தன்னுடைய காதை எதிராளி பிடித்தும் எதிராளியின் காதை தான் பிடித்தும் செய்வது மூன்றாவது வகை.

நாள் ஒன்றுக்கு 15 முதல் 50 தோப்புக்கரணம் போடலாம், பெண்கள் கர்ப்ப காலம், மாதவிடாய் காலம் தவிர்து செய்யவும். முதல் முறையாக செய்பவர்கள் 5 வரை செய்து, பிறகு அதிக படுத்தி கொள்ளலாம்.

தோப்புகரணம் போடும்போது காதுகளின் முக்கிய புள்ளிகளை அழுத்தி பிடித்து உட்கார்ந்து எழும்போது காதில் அழுத்தி பிடித்த இடத்தில் மிகச் சிறிய அளவு அழுத்தம் மாறுபடும். அவ்வாறு தொடர்ந்து அழுத்ததில் மாற்றம் நிகழ்ந்து கொண்டு இருக்குபோது, காதில் பிடித்து உள்ள இடத்தில் உள்ள நரம்புகளின் வழியாக அப்பகுதிக்கான உடல் உறுப்பு தூண்டப்படுகிறது.