புதினா இலையின் மருத்துவ குணங்கள்!

625.368.560.350.160.300.053.800.560.160.90

புதினா (Mentha spicata) ஒரு மருத்துவ மூலிகையாகும். ஆனால் நாம் உணவின் வாசனைக்காக மட்டும் சேர்த்து வருகிறோம். இதன் அற்புதமான மருத்துவ பயன்களை தெரிந்துகொண்டால் தொடர்ந்து பயன்படுத்த தவறமாட்டீர்.

புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன.

ஆஸ்துமா, உள் நாக்கு வளர்தல், மூட்டு வலி ஆகியவற்றைக் குணப்படுத்த வல்லது. புதினா உடற்சூட்டைத் தணிக்க உதவும்.

மேலும் புதினா இலையின் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்

பருமன் குறைக்க

வாயுப் பொருமல், வாய்த் தொல்லை, நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மை விலகும். உடல் தொப்பை, பருமன் குறைகிறது.

சளி, இருமல்

சளி, இருமல், மூக்கடைப்பு, ஆஸ்துமாவால் அவதியுறும் அன்பர்கள் உடனடி நிவாரணம் பெறுகின்றனர்.

தொண்டைப்புண்

தொண்டைப்புண் உள்ளவர்கள் புதினாக் கீரையை அரைத்து தொண்டையின் வெளிப்பகுதியில் பற்றுப்போட்டால் தொண்டைப் புண் ஆறிவிடும்

வயிற்றுப் பொருமல்

புதினாக் கீரை 60 கிராம் அளவில் எடுத்து 200 மில்லி தண்ணீரில் மூன்று மணி நேரம் ஊற வைத்து, இந்த தண்ணீரைக் குடித்து வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

வயிற்றுப் புழுக்களை அழிக்க

வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது. சளி, கப கோளாறுகளுக்கும் புதினா நல்ல மருந்தாகும்.

கர்ப்ப காலத்தில்

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு வாந்தி வருவது இயல்பானது. அந்த நேரங்களில் புதினாக்கீரையை சாப்பிட்டால் கர்ப்பிணிகளின் அதிகப்படியான வாந்தி நிற்கும்.

மூச்சுத்திணறல் பிரச்சனை

மூச்சுத்திணறல் பிரச்சனை உள்ளவர்கள், புதினா இலையைச் சிறிதளவு எடுத்து மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பின் இந்த நீரை குடித்தால் மூச்சுத்திணறல் பிரச்சனை நீங்கும்.

பொடுகு தொல்லைக்கு

புதினா சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு இவைகளை கலந்து கூந்தலில் தடவி ஊற வைத்து, சிறிது நேரம் கழித்து அலசினால் பொடுகு தொல்லை இருக்காது.