கற்பூரத்தின் நன்மைகள்!

1585908989 7457

பூஜைகள் செய்யப்படுவதற்கு குங்குமம், மஞ்சள், கற்பூரம், ஊதுபத்தி போன்ற பொருட்களை பயன்படுத்துகிறோம். ஆனால் இது அனைத்தும் நாம் ஏன் பயன்படுத்துகிறோம் என்று இன்றுவரை பலருக்கும் தெரிவதில்லை.

கற்பூரம் ஆண்டிபயாடிக் நிறைந்தது. இது நமது ஆரோக்கியத்திற்கும், அழகுக்கும் மிகவும் நன்மை பயக்கும். கற்பூரம் மற்றும் கற்பூர எண்ணெய் இரண்டும் மிகவும் பயனுள்ள பொருட்கள்.

கற்பூரம் பலருக்கும் ஏற்றுக்கொள்ளும் என்று சொல்லமுடியாது. எனவே பயன்படுத்தும் முன்பு மணிக்கட்டு பகுதியில் தேய்த்துவிட்டு எந்த அலர்ஜியும் இல்லை என்றால் பயன்படுத்தலாம்.

கற்பூரத்தின் மூலமாக தீபம் ஏற்றி கடவுளை வழிபடுவதன் மூலம் உங்கள் வீட்டில் செல்வம் அதிகரிக்கும். ஒரு சிறிய காகிதத்தில் கற்பூரத்தை மடித்து உங்கள் பணப்பையில் வைத்துக்கொள்வது நல்லது, இது உங்கள் பண வரவை அதிகரிக்கும்.

இன்று பலரும் சளி பிடித்திருக்கும் போது பயன்படுத்தும் தைல வகைகளில் முக்கியப் பொருளாக இந்த கற்பூரம்தான் சேர்க்கப்படுகிறது.

அதற்கு முக்கிய காரணம் அதன் நறுமணம் மற்றும் அதன் மருத்துவப் பண்புகளும்தான். பழங்காலத்தில் நாட்டு மருத்துவத்தில் கற்பூரம் பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்தது.

கற்பூரம் ஒன்றுதான் திடப்பொருளாக இருந்த திரவ பொருளாக மாறாமலேயே ஆவியாக மாறும் தன்மை கொண்டது. வேறு எந்த திடப்பொருளுக்கும் இந்த தன்மை கிடையாது.

கற்பூரத்தின் நன்மைகள் பற்றி பார்ப்போம்

கர்ப்பிணிப் பெண்களுக்கு

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் பிடிப்புகளுக்கு சிகிச்சையளிக்க கற்பூரம் எண்ணெயை வெளிப்புறமாகப் பயன்படுத்துவது ஒரு பொதுவான பாரம்பரிய தீர்வாகும்.

குழந்தைகள்

குழந்தைகள் வீட்டில் வைத்திருக்கும் கற்பூரத்தை தெரியாமல் சாப்பிட்டால் வலிப்பு வரை கொண்டு சென்று விட்டு விடும். ஆதலால், குழந்தைகளுக்கு எட்டும் வகையில் கற்பூரத்தை வைக்கக் கூடாது.

குதிகாலில் வெடிப்பு

குதிகாலில் வெடிப்பு இருந்தால், அதனை நீக்கும் தன்மை கற்பூரத்திற்கு உண்டு. மேலும் வெடிப்புக்களால் ஏற்படும் வலியைக் குறைத்து வெடிப்புக்களை விரைவில் சரி செய்தும் விடும்.

கால்களில் ஆணி இருந்தால் சாதாரணமாக நடப்பது சற்று கடினம். இதனால் மிகுந்த கஷ்டத்தைச் சந்திக்க நேரிடும். இதனை சரி செய்ய கற்பூர எண்ணெய் பெரிதும் உதவியாக இருக்கும்.

மூக்கு அடைப்பு

மூக்கு அடைப்பில் இருந்து உடனடி நிவாரணத்தை கற்பூரம் அளிக்கிறது.

பேன் தொல்லை நீங்க

பேன் தொல்லை நீங்க கற்பூரத்தை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, தலைக்கு தடவி வந்தால், நல்ல பயன் கிடைக்கும்.

எரிச்சல் நீங்க

கைகள், உடலில் ஏதேனும் நமச்சல், எரிச்சல், எரியும் உணர்வு இருந்தால் அந்த இடத்தில் கற்பூரத்தை தேய்த்தால் ஜில்லென இருக்கும். எரிச்சல் நீங்கும்.

நகச்சுத்தி

கையில் தொற்றுகளால் ஏதேனும் பாக்டீரியா, பூஞ்சைகளின் வளர்ச்சி இருக்கிறதெனில், ஆணி, நகச்சுத்தி என இருந்தால் அந்த இடத்தில் கற்பூரத்தை தேங்காய் எண்ணெய்யில் பேஸ்ட் போல் குழைத்து தடவினால் குணமாகும்.