தர்ப்பைப் புல்லின் மருத்துவ பயன்கள்!

dharpai grass 300x180 1
dharpai grass 300x180 1

தர்பை எல்லா இடங்களிலிலும் வளராது. மிகவும் தூய்மையான இடங்களில்தான் வளரும். தர்பை கதிர்வீச்சினை எதிர்க்கும் சக்தி கொண்ட தாவரமாகும். தர்பையில் மருத்துவ குணங்கள் பல உள்ளன.

இதன் ஒரு சில துண்டுகளை குடிநீர்ப் பானையில் போட்டுவைத்து, அந்த நீரை அருந்தினால் கடும் வெயிலின் தாக்கம் குறையும். சூரிய, சந்திர கிரகணத்தின்போது உணவுப் பொருள்களிலும், குடிநீரிலும் சிறிது தர்பைப் புல்லைப் போட்டு வைத்தால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

தர்பைப் புல்களின் காற்றுபட்ட இடங்களில் தொற்றுநோய் ஏற்படாமலிருக்கும் என்பதால், இதை கிராமத்து வீட்டு வாசல்களில் கொத்தாகக் கட்டி தொங்கவிட்டிருப்பார்கள்.

இந்தப் புல் இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவை கொண்டது. குடிநீரில் தர்பைப் புல்லை துண்டாக்கிப் போட்டு குடித்தால் சர்க்கரைநோய் கட்டுக்குள் இருக்கும். உடல் சூடு காரணமாக அடர் மஞ்சள் நிறத்தோடும், எரிச்சலோடும் சிறுநீர் கழிப்பவர்கள் கையளவு தர்பைப் புல்லை எடுத்து சுடுநீரில் காய்ச்சி ஆறவைத்து, வடிகட்டிக் குடித்தால் அந்த உபாதைகள் நீங்கும்.

சிறுநீரகம், கல்லீரல், குடல்புண், வாய்ப்புண் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் தர்பைப் புல் கொண்டு காய்ச்சிய நீரைக் குடித்தால் அந்தப் பிரச்னைகள் நீங்கும். அதோடு, சிறுநீரகக் கற்களையும் வெளியேற்றும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

ஆண்டு முழுவதும் வைத்துப் பயன்படுத்தும் ஊறுகாய், வற்றல், வடகம் போன்றவற்றில் சில தர்பைப் புற்களைப் போட்டுவைத்தால் அவை கெட்டுப்போகாமல் இருக்கும். அவற்றின் சுவையையும் மணத்தையும் அதிகரிக்கும்.

தர்பைப் புல்லால் செய்யப்படும் பாய் விரிப்பில் படுத்து உறங்கினால் உடல்சூடு தணியும். மன உளைச்சல் நீங்கும். நல்ல உறக்கம் கிடைக்கும். ஆரோக்கியம் நீடிக்கும்.