சந்தனத்தின் மருத்துவ பயன்கள்

unnamed 10
unnamed 10

சந்தனம் கட்டை இலேசான துவர்ப்புச் சுவையையும், குளிர்ச்சித் தன்மையையம் கொண்டவை. சந்தனம் உடலைத் தேற்றும். சிறு நீர் பெருக்கும்.வியர்வை உண்டாக்கும். குளிர்ச்சி உண்டாக்கும்.

சந்தனம் பூக்கள் சிறியவை. பழுப்பு நிறமானவை. சிறிய கொத்துகளில் காணப்படும். பழங்கள் உருண்டையானவை. முதிர்ந்த மரங்கள் காய்ந்த நிலையில் நறுமணம் கொண்டவை.

சிறுநீர் எரிச்சல் தீர

சிறுநீர் எரிச்சல் தீர சந்தனம் தூள் எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் காய்ச்சி வடிகட்டி குடிநீர் செய்து குடித்து வந்தால் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் தீரும்.

முகப்பரு சரியாக

முகப்பரு , படர் தாமரை குணமாக சந்தனம் கட்டையை, எலுமிச்சம் பழச்சாறு விட்டு நன்றாக உரைத்து பசையாக செய்து படர் தாமரை, வெண்குஷ்டம், முகப் பரு உள்ள இடங்களில் பூசி வந்தால் இவை அனைத்தும் குணமாகும்.

கண்கட்டி குணமாக

கண்கட்டி குணமாக சந்தனக்கட்டையை எலுமிச்சம்பழச்சாற்றில் நன்கு அரைத்து பசை போல் செய்து, கண் கட்டிகள் மீது பற்று போட வேண்டும். இரவில் படுக்கைக்கு செல்வதற்கு முன்னர் இவ்வாறு செய்து வந்து காலையில் கழுவிவிட வேண்டும்.

தலைவலி குறைய

சந்தனக்கட்டைகளை அரைத்து தலையில் தடவி வந்தால் கோடை வெயிலால் தலையில் ஏற்படும் கொப்புளங்கள் குணமாகும். மேலும், தலைவலி, மூளை, இதய பாதிப்புகளை சரிசெய்து, உடல் நிலையை சமநிலையில் வைக்கும்.

இரத்தத்தை தூய்மை செய்ய

சுத்தம் செய்த நல்ல சந்தனத்தை நீரில் கரைத்து அருந்திவந்தால் இரத்தத்தை தூய்மை செய்து, உடலை குளுமையாக்கி, மனதை ஊக்கப்படுத்தி, சுறுசுறுப்பாகவே வைத்திருக்கும்.

நமைச்சல், சொறி போக

சந்தனக்கட்டையை எலுமிச்சை சாற்றுடன் அரைத்து உடலில் உள்ள அரிப்பு, நமைச்சல், சொறி சிரங்கு, தேமல், வீக்கம் மற்றும் சகல சரும வியாதிகளுக்கும் குணமாகும்.

சந்தனத்தை மருதாணி விதைகளில் கலந்து சாம்பிராணி போட்டுவர வீடுகளில் காற்று தூய்மையாகி மனம் தெளிவுறும்.