பொட்டு கடலையில் உள்ள பல வகையான பயன்கள்

1610437998 2867
1610437998 2867

பொட்டுக்கடலையில் அதிகளவு புரத சத்துக்களும் வைட்டமின் சத்துக்களும் உள்ளதால், இதை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு எலும்புகள், தசைகள் மற்றும் நரம்புகள் வலுப்பெறும். மேலும் பொட்டுக்கடலை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கிறது.

கடினமாக உழைப்பவர்கள் சிறிதளவு பொட்டுக்கடலை சாப்பிட்டால் உடலின் சக்தியை அதிகரிக்கும். மேலும் இந்த பொட்டுக்கடலையில் அதிகளவு புரத சத்து இருப்பதால், உடலில் எலும்புகள், தசைகள், திசுக்கள், செல்கள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

தோலில் ஏற்பட்டிருக்கும் சொறி, சிரங்கு, படை பாதிப்புகளை விரைவாக நீக்கும் தன்மை இந்த உடைத்த கடலை பருப்பிற்கு உண்டு.

பொட்டுக்கடலை சாப்பிடுவதால் உடல் வளர்ச்சி அதிகரிக்கும் அதே போல் இதில் பல வகையான சத்துக்கள் இருப்பதால் நரம்பு சம்பந்தமான பாதிப்புகளில் இருந்து நம்மை காக்கிறது.

உடைத்த கடலை பருப்புகளை அதிகம் உண்பதால் அதிலிருக்கும் சத்துக்கள் ரத்தத்தில் இருக்கும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து வைரஸ் தொற்று போன்றவற்றிலிருந்து நம்மை காக்கும்.