உடலில் உள்ள அசுத்த இரத்தத்தை சுத்தம் செய்யும் சில குறிப்புகள்

download 1 1
download 1 1

இரத்தம் என்பது அனைத்து உயிரினங்களின் உடலிலும் உள்ள சிவப்பு நிற திரவம் ஆகும். இரத்தத்தின் முக்கியமான வேலை உடலில் உள்ள செல்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருளான அக்சிஜனையும் ஊட்டச்சத்தையும் கொண்டு சேர்பதாகும்.

அதே போல் இரத்தமானது அனைத்து செல்களில் இருந்து கழிவுப் பொருட்களையும் வெளியேற்றுகிறது.

நாள்தோறும் நம் உடலில் ஓடும் ரத்தத்தில் அசுத்தங்கள், நச்சுகள், கழிவுகள் சேர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.

இதன் விளைவு நோய்கள், சாதாரண சரும பிரச்னை தொடங்கி வெரிகோஸ் வெயின், புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களுக்கும் ரத்த சுத்தமின்மையே ஒரு முக்கிய காரணம்.

இதனை தடுக்க ஒரு சில இயற்கை வலிகள் உள்ளது. தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

தினமும் நமது உணவில் பீட்ரூட்டை சமைத்து சாப்பிட்டு வந்தால், நமது உடம்பில் புத்தம் புதிய ரத்தம் உற்பத்தியாகும்.
பீட்ரூட்டை நறுக்கிப் பச்சையாக எலுமிச்சைப்பழச் சாறு கலந்து சாப்பிட்டால், ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும்.

அரை டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து இரவில் குடித்து வருவது நல்லது. முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்தசோகை இருப்பவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் உற்பத்தியாகும்