பருவினால் உணடாகும் பிரச்சனைகளை தீர்க்கும் வழிமுறைகள்

1532081110 3801
1532081110 3801

வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு பருக்களுக்கு சில கை வைத்தியமும் உண்டு.

அரிவு மாவு 2 தே.க வெள்ளரி சாறு 2 தே.க, ஒரு சிட்டிகை மஞ்சள் அல்லது கஸ்தூரி மஞ்சள் சேர்த்து கலந்து பருக்கள் மற்றும் தழும்பு உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம் கழித்து சாதாரண தண்ணீரில் கழுவலாம்.

சருமத்தில் உள்ள எண்ணெய் பசை குறையும், உடல் சூட்டினை போக்கும். துளசி இலை சாறும் பருக்கள் உள்ள இடத்தில் தடவலாம். வேப்பிலை மிகவும் நல்ல மருந்து.

வேப்பிலை பவுடர் 1 தே.க பன்னீர், முல்தானி மெட்டி 2 தே.க கலந்து சருமத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவி வந்தால் பருக்கள் குறையும்.நிலவேம்பு பவுடரும் பயன்படுத்தலாம். அதில் இருக்கும் கசப்பு, ஆன்டி பேக்டீரியல், ஆன்டி பங்கல், சரும பிரச்னை வராமல் பாதுகாக்கும். இதனை சாதாரண மற்றும் எண்ணெய் சருமம் உள்ளவர்கள் செய்யலாம். வறண்ட சருமம் உள்ளவர்கள் பயன்படுத்தக்கூடாது.

நிலவேம்புடன் சந்தனம் சர்த்து பயன்படுத்தலாம். நிலவேம்பு 1 தே.க, உரசிய சந்தனம் 1 தே.க, முல்தாணி மெட்டி 1 தே.க பன்னீருடன் கலந்த முகத்தில் பத்து போடுவதைப் போல் போட்டு இரண்டு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவலாம். இது பருவினால் ஏற்பட்ட பள்ளத்தை சரி செய்யாது.