வால்மிளகில் உள்ள மருத்துவ குணங்கள்!

vikatan 2019 07 2d8b5554 aa57 4044 abeb 411d76f71936 66
vikatan 2019 07 2d8b5554 aa57 4044 abeb 411d76f71936 66

வால்மிளகினால் வயிற்றுவலி, வாதம், பித்தம், கபம், இவற்றினால் ஏற்படும் நோய்கள் மற்றும் வெட்டை ஆகியவை தீரும்.

தலைவலி, வாய் நாற்றம், பல் ஈறுகளில் ஏற்படும் வலி, திண்டை புண், குரல் கம்மல் முதலியவற்றை போக்கும்.

நீர் சுருக்கு கல் அடைப்பு முதலியவற்றை நீக்கி சிறுநீரை சுத்தப்படுத்தும், வாயுவை குணப்படுத்தும்.

சந்தனப்பொடி, வால்மிளகு பொடி, அதிமதுரம் இவைகளை கலந்து சுண்டக் காய்ச்சி மூன்று வேளை சிறிது சாப்பிட்டு வர குணமாகும்.

சிறு குறிஞ்சான் இலை உலர்த்தி சூரணம் செய்து பத்தில் ஒரு பங்கு வால் மிளகுத்தூள் சேர்த்து 5 கிராம் தேனில் சாப்பிட நீரிழிவு நோய் குறையும்.

இலவங்கப்பட்டை ஒன்றரை பங்கு, வால்மிளகு கால் பங்கு எடுத்து நன்கு பொடித்து 3 வேளையாக நெய்யில் கலந்து சாப்பிட இரும‌ல் குறையும்.