வயிறை சுத்தப்படுத்தி கழிவுகளை வெளியேற்றணுமா? இந்த 5 ஜூஸ் குடிச்சாலே போதும்!

625.500.560.350.160.300.053.800.748.160.70
625.500.560.350.160.300.053.800.748.160.70

மனித உடலின் மொத்த ஆரோக்கியமும் நம் வயிற்றுக்குள் தான் இருக்கிறது. அதாவது நாம் உண்ணும் உணவில் தான் நம் ஆரோக்கியமே இருக்கிறது.

நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.

சில அளவு கடந்த உணவுகளை எடுத்துக்கொள்வதால் உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதிலும் குறிப்பாக வயிற்றில் சில பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே இவற்றை சரி செய்ய வயிற்றை சுத்தப்படுவது நல்லது ஆகும்.

அந்தவகையில் வயிறை சுத்தப்படுத்தி கழிவுகளை வெளியேற்ற உதவும் சிறந்த ஜூஸ் வகைகள் என்ன என்று பார்ப்போம்.

  • ஒரு வெள்ளரிக்காயை தோல் சீவி எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் அதிமதுர இலைகளை சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். சுவைக்கு வேண்டுமென்றால் உப்பு சேர்த்துக்கொள்ளலாம். இந்த ஜூஸ் குடலில் உறுஞ்சும் தன்மையை மேம்படுத்தும் வைட்டமின்களை கொண்டுள்ளது. இது வயிற்றில் ஏற்படும் எரிச்சலை சரி செய்ய உதவுகிறது.
  • இரண்டு தக்காளி மற்றும் ஒரு சில ஸ்ட்ராபெர்ரிகளை சிறு துண்டுகளாக வெட்டி, மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து சுவைக்கு தேன் சேர்த்துக் கொள்ளலாம். இந்த ஜூஸ் நமது ரத்தத்தில் உள்ள பிளேட்லெட் எண்ணிக்கையை பாதுகாக்க உதவுகிறது. நமது உடலில் ஹீமோகுளோபின் அளவை பராமரிக்கவும் உதவுகிறது.
  • ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு பழங்களை மிக்ஸியில் போட்டு ஜூஸ் செய்து எடுத்துக் கொள்ளவும். இந்த பழங்களுடன் வேறு சில பழங்கள் அல்லது சுவைக்கு தேன் கூட சேர்த்து கொள்ளலாம். இந்த ஜூஸில் நமது உடலுக்கு தேவையான விட்டமின் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. பொதுவாக இந்த ஜூஸ் குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
  • கேரட் மற்றும் பப்பாளியை சிறு துண்டுகளாக நறுக்கி ஜூஸ் செய்து எடுத்துக் கொள்ளவும். இந்த ஜூஸ் சிறந்த ஆக்சிஜனேற்றியாக செயல்படுகிறது. இது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், வைரஸ் போன்ற நோய் தொற்றுகளில் இருந்து தற்காத்து கொள்வதற்கும் உதவுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது கண்பார்வை போன்ற பிரச்சனைகளை சரிசெய்யவும், மூட்டுகளை பலப்படுத்தவும் உதவுகிறது.
  • சிறிது வீட்கிராஸ் மற்றும் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இந்த ஜூஸில் அதிக அளவு கலோரிகள் உள்ளது. இது நமது உடலில் ரத்தத்தை உருவாக்குகிறது. இந்த ஜூஸில் நிரம்பியுள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நமது குடலில் உள்ள நுண்ணுயிரியை பாதுகாக்க உதவுகிறது.