கறுப்பு ஞாயிறு தினம் இன்று!

1615084997 8170459 hirunews
1615084997 8170459 hirunews

ஏப்ரல் 21 தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இதுவரை தீர்வு கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்து கொழும்பு பேராயர் இல்லத்தினால் அறிவிக்கப்பட்ட கறுப்பு ஞாயிறு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

கறுப்பு ஞாயிறு குறித்த தெளிவுப்படுத்தல்களை பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வெளிப்படுத்தியிருந்தார்.

இதற்கமைய, இன்றைய தினம் கத்தோலிக்க மக்கள் கறுப்பு ஆடை அணிந்து ஞாயிறு ஆராதனைகளில் கலந்துக்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கறுப்பு ஞாயிறானது ஒரு நாள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடையோருக்கு எதிராக தண்டனைகள் வழங்கப்படும் என இரண்டு வருடங்களுக்கு மேல் காத்திருந்த போதிலும் அது இதுவரை நிகழவில்லை.

எனவே அமைதியான முறையில் அதற்கான எதிர்ப்பினை வெளிப்படுத்தவுள்ளதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.