எப்போதும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ 10 வழிகள்

hispotion 1600x1200 1
hispotion 1600x1200 1

உங்களுக்குத் தெரியுமா? நம் வாழ்நாளில் முக்கால்வாசி நாட்களில் நாம் கவலைப்பட்டுக் கொண்டே இருக்கிறோமாம். கால்வாசி வாழ்வைத் தூங்கியே கழிக்கிறோம். பின் எப்போது தான் நாம் மகிழ்வாக இருக்கிறோம். மகிழ்ச்சியைத் தொலைத்த நாட்களில் வாழ்வு என்று ஒன்று எங்கே இருக்கிறது?


1 மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துங்கள்
2 தினமும் நிறைய தண்ணீர் அருந்துங்கள்
3 உங்களுக்குள் உன்னதமான ஆற்றல் மறைமுகமாக இருப்பதை உணருங்கள்
4 வானில் சுதந்திரமாக பறக்கும் பறவையாக உங்களை உணருங்கள்
5 நேர்மறையான எண்ணங்களை உங்களின் மனதில் தினமும் ஐந்து முறை உருவாக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்
6 நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கையே உலகில் சிறப்பானது என்று உணருங்கள்
7 ‘No’ சொல்லக் கற்றுக் கொள்ளுங்கள்
8 நன்றாக வாய் விட்டுச் சிரியுங்கள்
9 எல்லோரிடமும் அன்பைச் செலுத்துங்கள்
10 வாழ்க்கையை சுலபமாக எடுத்துக் கொள்ளுங்கள்
அழுத்தும் பணிச்சுமைகள், துரத்தும் கடமைகள், நிற்க நேரமின்றி, யாரையும் நிமிர்ந்து பார்க்க நேரமின்றி ஓடிக்கொண்டே இருக்கிறோம். இப்போதெல்லாம் நாட்கள் எவ்வளவு வேகமாகக் கரைகின்றன கவனித்தீர்களா?

வாழ்வை சுலபமாக எடுத்துக் கொள்ளுங்கள். திட்டமிடப்பட்டு நேர்த்தியாக வாழும் வாழ்வில் என்ன சுகம் இருந்து விடப் போகிறது. திருப்புமுனைகள் தான் அழகு. ” அப்றம் நேத்து அடிக்க வரேன்னு சொன்னீங்க, வரவே இல்ல..” என்கிற ரீதியில் வாழ்வைக் கையாளுங்கள். வாழ்வில் கொண்டாட்டங்களுக்கான காரணங்களைத் தேடித் கொண்டே இருங்கள்.

சொல்வதற்கு நன்றாகத் தான் இருக்கும். வாழ்ந்து பார்ப்பவர்களுக்குத் தான் வலி தெரியும் என்கிறீர்களா? எப்படியும் வாழத் தான் போகிறோம். அதை இப்படி வாழ்ந்து பார்ப்போமே. நாம் மகிழ்ந்திருக்கப் படைக்கப்பட்டவர்கள். நம் வாழ்வு நமக்கானது மட்டுமே.