கோடைக்காலத்தில் தேங்காய் பாலை குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

coconut milk benefits 696x411 1
coconut milk benefits 696x411 1

கோடைக்காலத்தில் வெயிலை சமாளிக்க குளிர்ச்சியான பானங்களையே பலரும் விரும்புகின்றனர். தேங்காய் பாலும் உடல் சூட்டை வெகுவாக குறைக்கக் கூடியது. தென்னிந்திய சமையல்களில் தேங்காய் பால் பயன்படுத்தப்படுகிறது. கோடைகாலத்தில் ஒரு டம்ளர் தேங்காய் பாலை குடித்தால் உங்கள் உடல் வெப்பத்தினால் பாதிக்கப்படாமல் இருக்கும். உடலில் நீர்ச்சத்து வற்றாமல் இருக்கும்.

தேங்காய் பால் அதிகம் வயிறு அடைத்த உணர்வைக் கொடுக்காது. தேங்காய்ப் பாலின் நன்மைகளை தெரிந்து கொண்டால் நிச்சயம் அதை உணவில் சேர்த்துக் கொள்வீர்கள்.

தேங்காய் பாலின் நன்மைகள்
பல்வேறு வகையான நோய்களையும் குணமாக்கும். உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளையும் அழுக்குகளையும் அகற்றவும் மற்றும் இரத்தத்தை சுத்திகரிக்கவும் உதவும்.

தேங்காய் பாலில் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அடங்கி உள்ளன. அவை ஆரோக்கியமான சருமத்தையும், கூந்தலை வலுப்படுத்தவும் உதவுகின்றன.

தேங்காய் பாலில் அடங்கியுள்ள அதிகப்படியான நார்ச்சத்து உடல் எடையை குறைக்க உதவும். உடலில் உள்ள எலெக்ட்ரோலைட்ஸை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது.தேங்காய் பால் எளிதில் செரிக்கக் கூடியது.

தேங்காய் பால் இரத்த அழுத்தத்தை திறம்பட நிர்வகிக்க உதவுகிறது. தேங்காய் பாலில் பொட்டாசியம் மிகவும் அதிகம்.தேங்காய் பாலில் இருக்கும் இரும்புச் சத்து இரத்த சோகையைப் போக்க உதவுகிறது.

தேங்காய் பால் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க தேங்காய் பால் மிகவும் உதவுகிறது. ஒரு டம்ளர் தேங்காய் பால் நாள் முழுவதும் உடலை நீர்ச்சத்து குறையாமல் வைத்துக் கொள்ள உதவுகிறது.

புரதச் சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உட்பட்ட தாதுபொருட்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள் நார்ச்சத்துகள் என உடல் இயக்கத்துக்கு தேவைப்படும் அனைத்துச் சத்துக்களும் தேங்காயில் உள்ளன.