நகங்கள் உடையாமல் பாதுகாக்கும் எளிய வழிமுறைகள்!

4 11
4 11

ஏதாவது ஒரு வகையில் பல நாட்கள் பாதுகாப்பாக வைத்திருந்த நகம் படக்கென உடைந்து அதிர்ச்சிக்கு உள்ளாக்கிடும். இதற்கு காரணம் நம் உடலில் சரியான ஊட்டச்சத்து இல்லாதது தான்.

  • கால்ஷியமும் புரோட்டீனும் அதிகமுள்ள உணவு வகைகளை உட்கொள்ளவது நகங்களுக்கு சிறந்தது.இந்த சத்துக்கள் கிடைப்பதற்கு முட்டையை தினமும் உணவில் எடுத்து கொள்ளுங்கள்.
  • அயன் மற்றும் ஜிங்க் நிறைந்த உணவை சாப்பிட வேண்டும் அதாவது பேரிச்சம்பழம் கலந்த பால் சாப்பிட்டு வந்தால் உடைந்த நகம் கூட நன்கு வளரும்.
  • விட்டமின் ஏ மற்றும் பயோட்டீன்(விட்டமின் பி) நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளவது நகங்களுக்கு பலத்தை பெருக்கும். கேரட், பீட்ரூட் போன்ற காய்கறி சேர்த்து கொள்ளுங்கள்.
  • சியா விதைகள், சம்சா விதைகளை சேர்த்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியமான நகங்கள் கிடைக்க இவை துணை புரியும். வெதுவெதுப்பாக ஆலிவ் ஆயிலை சூடாக்கி நகங்களில் வாரம் ஒரு முறை மசாஜ் செய்து வந்தால் நகங்களை உடையாமல் பாதுகாக்கலாம்.
  • பாதாம் எண்ணெய்யை இரண்டு சொட்டு நகத்தில் தேய்த்து வந்தால் இயற்கை முறையில் ஆரோக்கியமான பலப்பலப்பான நகம் வளரும். கைகள் ஈரமாக இருக்கும் போது நகங்களை ஷேப் செய்வதை தவிர்த்து கொள்ளுங்கள்.
  • தரமான நெய்ல் பாலிஷ்களை மட்டுமே பயன்படுத்துங்கள். நெய்ல் பாலிஷ் ரிமுவரை அடிக்கடி பயன்படுத்துவது நகரங்களுக்கு தீங்கு விளைவிக்கும். நெய்ல் பாலிஷ் ரிமுவர் உடன் சிறிது கிளிசரின் சேர்த்து உபயோக்கிப்பது நல்லது.