வேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

veppilai tharum viyakka vaikkum palangal
veppilai tharum viyakka vaikkum palangal

தினமும் காலையில் வெறும் வயிற்றில் வேப்பிலை சாப்பிடுவதால் இயற்கையாகவே நம் உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.

வேப்பிலை இலைகள் கொண்டு பல்வேறு நோய்களுக்கு மருந்தாக அமைகிறது. பெரும்பாலும் சித்த மருத்துவத்தில் நோய்களைக் குணப்படுத்துவதற்கு வேப்பிலை முக்கியமான ஒன்றாக பயன்படுத்தப்படுகிறது.

வேப்பிலையில் உள்ள நிம்பின், நிம்பினென், நிமான்டியல் மற்றும் இதர பொருட்களான ஆன்டி-பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்றவை அடங்கியுள்ளன. வேப்பிலையை தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், நம் உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கையாகவே தீர்வு காணலாம்.

இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையைக் குறைத்து, சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைக்கும்.

குழந்தைகள் அதிகம் அவதிப்படுக்கூடிய குடல் புழுக்களை அழித்து பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.

வயிற்றுப்போக்கால் அவஸ்தைப்படுபவர்களுக்கு, வேப்பிலை நல்ல நிவாரணத்தை வழங்கும்.

சளி பிடித்திருப்பவர்களுக்கு வேப்பிலை உடனடி நிவாரணத்தை வழங்கும். சளியில் இருந்து விரைவில் விடுபட 7 வேப்பிலையை 3 டம்ளர் நீரில் போட்டு நன்கு சுண்ட காய்ச்ச வேண்டும். பின் அதை குளிர வைத்து வெதுவெதுவெதுப்பான நிலையில் குடிக்க வேண்டும்.

வேப்பிலை இரத்தத்தின் அடர்த்தியை அதிகரிக்கும் நச்சுப் பொருட்கள், கிருமிகள் போன்றவற்றை அழித்து, இரத்த அடர்த்தியைக் குறைத்து மெலிதாக்கி, உடலில் சுத்தமான இரத்த ஓட்டத்தை மென்மையாக வைத்துக் கொள்ளும்.