மருத்துவ பலன்களை அள்ளித்தரும் நன்னாரி

1619153733 7347
1619153733 7347

நன்னாரி குறுகிய நீண்ட இலைகளையுடைய கம்பி போன்ற கொடியினம். இதன் நறுமணம் உள்ள வேர்களே மருத்துவ பயனுடையது. நன்னாரிக்கு நறுக்கு மூலம், நறு நீண்டி போன்ற வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.

தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் தானே வளரக்கூடியது. நன்னாரியில் பக்கவிளைவுகள் இல்லை, நன்னாரி என்றாலே சர்பத்துதான் நினைவுக்கு வரும். இதில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் நமக்கு கிடைக்கின்றன.

நன்னாரி வேரை அரைத்து தேனில் கலந்து சாப்பிட்டு வர அதிபித்தம் தீரும். நன்னாரி வேரை அரைத்து அதை கற்றாழை சாற்றுடன் சாப்பிட வண்டு கடியினால் ஏற்பட்ட அனைத்து பாதிப்புகளும் தீரும்.

வேர் சூரணம் அரை கிராம் காலை, மாலை வெண்ணையில் கொள்ள ஆரம்ப குஷ்டம் தீரும். தேனில் கொள்ள பாண்டு, காமாலை தீரும்.