ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் தக்காளி!

625.0.560.350.160.300.053.800.668.160.90 19
625.0.560.350.160.300.053.800.668.160.90 19

தக்காளியை காயாகவும் சமைக்கலாம், பழமாகவும் சமைக்கலாம். பச்சையாகவே சாப்பிடுவது மிகவும் நல்லது. ஆனால் சாப்பிடுவதற்கு முன் பழத்தைச் சுத்தமாகக் கழுவி விட வேண்டும்.

காய் கறிகளில் மிகவும் எளிதிலும் விரைவாகவும் ஜீரணமாகக் கூடியது தக்காளி. உடம்புக்கு ஆரோக்கியம் அளிக்கும் மூன்று விதமான புளிப்புகளும் தக்காளிப் பழத்தில் இருக்கின்றன.

வைட்டமின் கே மற்றும் கால்சியம் சத்தானது தக்காளி பழத்தில் அதிக அளவில் உள்ளது. இதை தினந்தோறும் நாம் சாப்பிட்டு வருவதன் மூலம் நம் எலும்புகள் உறுதியாக்கப்படுகின்றன.

தக்காளியில் இருக்கும் வைட்டமின் ஏ சத்தானது கண் பார்வையை மேம்படுத்துகிறது. மாலைக்கண் வியாதி வராமல் தடுக்கிறது. தக்காளியில் உள்ள குரோமியம் அதிகமாக உள்ளதால் இது நம் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.

தக்காளி பலவீனம், சோம்பல் இவற்றை நீக்கிச் சுறுசுறுப்பைத் தருகிறது. இருதய சம்பந்தமான நோய்களுக்கு இது ஏற்றது. தக்காளியை, பருப்பு சேர்த்து கறி, கூட்டு, சாம்பார், குழம்பு, ரசம் இத்தனையும் தயாரிக்கலாம். புளிப்புப் பச்சடியாகவோ, இனிப்புப் பச்சடியாகவோ சமைத்து உண்டு மகிழலாம்.

தக்காளி விழுதுடன் சிறிதளவு தயிர் சேர்த்து, முகத்தில் தடவி ஃபேஸ் மாஸ்க் போட்டு அரை மணி நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுவி வந்தால் சருமம் மென்மையாக மாறும்.