கொத்தமல்லி அதிகம் சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் நன்மைகள்!

large coriander leaves 52506
large coriander leaves 52506

உணவை சீரணித்து நமக்கு சக்தியை தரும் வயிறு மற்றும் குடல் உறுப்புக்கள் நன்றாக இயங்க கொத்தமல்லி உதவுகிறது.

செரிமானத்தை அதிகரிக்கும் கொத்தமல்லியில் நறுமண எண்ணெய் இருப்பதால், பசியை தூண்டி வயிற்றில் செரிமானத்திற்குப் பயன்படும் சுரப்புக்களை அதிகமாக சுரக்க உதவுகிறது. எனவே உடலின் செரிமான சக்தியை அதிகரித்து, செரிமான திறனை மேம்படுத்துகிறது.

கொத்தமல்லி இலைகளுக்கு பூஞ்சைகள், நச்சுக்கள் போன்றவற்றை அழிக்கும் நீக்கும் ஆற்றலும், ஆன்டி-செப்டிக் தன்மை அதிகமுண்டு. எனவே சில சரும நோய்களை நீக்குவதில் கொத்தமல்லி சிறப்பாக செயல்படுகிறது.

தோல் தடிப்பு, அரிப்பு மற்றும் இதர சருமம் சம்பந்தமான வியாதிகளுக்கு புதிய கொத்தமல்லி இலைகளை அரைத்துத் தேனுடன் கலந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் நன்றாக கழுவினால் தோல் வியாதிகள் விரைவில் குணமாகும்.

உடலுக்கு ஏற்படும் தொற்று நோய்களான அனைத்து வகையான அம்மை நோய்களுக்கும் எதிராக கொத்தமல்லி சிறப்பாக செயல்படுகிறது. எனவே அம்மை நோய் பாதித்தவர்கள் கொத்தமல்லி அதிகம் சாப்பிட்டு வர விரைவில் குணம் கிடைக்கும்.

கொத்தமல்லி இலையில் சிட்ரோநெல்லோல் எனப்படும் சிறப்பான கிருமிநாசினித் வேதிப்பொருள் உள்ளது. வாயிலுள்ள புண்கள் ஆறவும், சுவாசம் புத்துணர்ச்சி பெறவும் அடிக்கடி கொத்தமால்லி இலைகளை சாப்பிட்டு வருவது நல்லது.